< Back
மாநில செய்திகள்
ரெயிலில் அடிபட்டு காவலாளி பலி
திருச்சி
மாநில செய்திகள்

ரெயிலில் அடிபட்டு காவலாளி பலி

தினத்தந்தி
|
3 July 2023 1:13 AM IST

ரெயிலில் அடிபட்டு காவலாளி உயிரிழந்தார்.

பொன்மலைப்பட்டி:

திருவெறும்பூர் அருகே உள்ள மேலக்குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் நிர்மல்ராஜ்(வயது 36). இவர் திருச்சியில் உள்ள பிரபல நகை மற்றும் பாத்திரக்கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நிர்மல்ராஜ் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

இந்நிலையில் நேற்று திருவெறும்பூர் அருகே கணேசபுரத்தின் பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாளத்தின் அருகே ரெயிலில் அடிபட்ட நிலையில் நிர்மல் ராஜ் இறந்து கிடந்தார். இது பற்றி பொன்மலை ரெயில்வே போலீசாருக்கு அக்கம், பக்கத்தினர் தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நிர்மல்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பொன்மலை ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்