< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி காவலாளி பலி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி காவலாளி பலி

தினத்தந்தி
|
22 July 2022 9:56 PM IST

கீழ்வேளூர் அருகே மின்சாரம் தாக்கி காவலாளி பலியானார்.

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே மின்சாரம் தாக்கி காவலாளி பலியானார்.

மின்சாரம் தாக்கியது

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் காக்கழனி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 60). இவர் கீழ்வேளூரை சேர்ந்த பால்பாஸ்கரன் என்பவர் அகரகடம்பனூர் ஊராட்சியில் கட்டி வரும் குடியிருப்புகளுக்கு காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அர்ஜூனன் பணியில் இருந்த போது தண்ணீர் தேவைக்காக மின்மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அர்ஜூனன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்