< Back
மாநில செய்திகள்
வாகன நிறுத்துமிடத்தில் தூங்கியபோது கார் சக்கரத்தில் சிக்கி காவலாளி பலி
சென்னை
மாநில செய்திகள்

வாகன நிறுத்துமிடத்தில் தூங்கியபோது கார் சக்கரத்தில் சிக்கி காவலாளி பலி

தினத்தந்தி
|
15 May 2023 6:21 AM IST

வாகன நிறுத்துமிடத்தில் தூங்கியபோது கார் சக்கரத்தில் சிக்கி காவலாளி பரிதாபமாக இறந்தார்.

காவலாளி

சென்னை தேனாம்பேட்டை, தாமஸ் சாலை குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் வேணு (வயது 70). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். பகலில் வேலை முடிந்த பின்னர், இரவு அந்த நிறுவன வளாகத்திலேயே தூங்குவது வழக்கம். சம்பவத்தன்று வேணு, வணிக வளாகத்தின் வாகன நிறுத்தும் இடத்தில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது ஒருவர், அங்கு நிறுத்தி இருந்த தனது காரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றார்.

கார் சக்கரத்தில் சிக்கி பலி

அப்போது, அங்கு தூங்கி கொண்டிருந்த காவலாளி வேணு மீது கார் ஏறி இறங்கியது. கார் சக்கரத்தில் சிக்கிய வேணு உடல் நசுங்கியதில் படுகாயம் அடைந்தார். ஆனால் காரை ஓட்டி வந்தவர், நிற்காமல் அங்கிருந்து வேகமாக சென்று விட்டார்.

வேணுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் ஆய்வு செய்து உயிரிழப்புக்கு காரணமான ஆசாமியை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்