< Back
மாநில செய்திகள்

விருதுநகர்
மாநில செய்திகள்
கட்டிடத்தில் இருந்து விழுந்து காவலாளி பலி

4 Jun 2023 12:15 AM IST
கட்டிடத்தில் இருந்து விழுந்து காவலாளி பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள வத்திராயிருப்பு ஆகாசம்பட்டியை சேர்ந்தவர் மணக்கன்(வயது 55). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி ரோட்டில் தனியாருக்கு சொந்தமான நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அங்குள்ள கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.