< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஜி.எஸ்.டி. படிவம் தாக்கல் செய்ய வருகிற 27-ம் தேதி வரை கால அவகாசம்
|20 Dec 2023 7:56 PM IST
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி. படிவம் தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நடைமுறையில், வரி கணக்கு தாக்கல் செய்ய, பல்வேறு படிவங்கள் உள்ளன. இதில், ஆண்டு முழுவதுக்கும், ஒரே கணக்கு தாக்கல் செய்ய, 'படிவம்-9' பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், வணிகர்கள் ஜி.எஸ்.டி. படிவம் தாக்கல் செய்ய வருகிற 27-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி படிவத்தை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாக இருந்த நிலையில், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்ட வணிகர்களுக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் அளித்து வணிக வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.