தேனி
ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி அரிசி பையுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|தேனி பழைய பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
தேனி பழைய பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் லாசர், மாவட்ட செயலாளர் அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், தாலுகா செயலாளர் தர்மர் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்யக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் கம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கம்பம் பகுதி குழு உறுப்பினர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்வேல் முன்னிலை வகித்தார். கம்பம் பகுதி செயலாளர் லெனின் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு திரும்ப பெற கோரி அரிசி பையுடன் கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.