< Back
மாநில செய்திகள்
அச்சு மைக்கு ஜி.எஸ்.டி. வரியை   குறைக்க வேண்டும்
விருதுநகர்
மாநில செய்திகள்

'அச்சு மைக்கு' ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்

தினத்தந்தி
|
30 Aug 2022 1:50 AM IST

அச்சு மைக்கான ஜி.எஸ்.டி.வரியை குறைக்க வேண்டும் என அச்சுத்தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிவகாசி,

அச்சு மைக்கான ஜி.எஸ்.டி.வரியை குறைக்க வேண்டும் என அச்சுத்தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

பேரவை கூட்டம்

அச்சு தொழிலாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட பேரவை கூட்டம் மாநகராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அம்பேத்குமரேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தேவா கூட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் அறிக்கை வாசித்தார்.

சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் மகாலட்சுமி சிறப்புரையாற்றினார். பேரவை கூட்டத்தில் புதிய மாவட்ட தலைவராக வேல்முருகனும், செயலாளராக அம்பேத்குமரேசனும், பொருளாளராக கிருபாசந்திரா உள்பட 15 புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அச்சு மைக்கான ஜி.எஸ்.டி.வரியை 18 சதவீதம் என்பதை குறைக்க வேண்டும். அட்டை மற்றும் பேப்பர் உள்ளிட்ட மூலப்பொருகளின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். மூலப்பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அச்சு தொழிலுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். மின் கட்டணத்தை உயர்த்த கூடாது. விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு அச்சு தொழி லாளர்களுக்கு சம்பளம் மற்றும் போனஸ் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்டக்குழு உறுப்பினர்கள் முருகன், ஜோதிமணி, லாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்