< Back
மாநில செய்திகள்
ஜி.எஸ்.டி. இணை ஆணையர் குடும்பத்தினரை மிரட்டிய 3 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ஜி.எஸ்.டி. இணை ஆணையர் குடும்பத்தினரை மிரட்டிய 3 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
28 Dec 2022 12:15 AM IST

கள்ளக்குறிச்சி அருகே ஜி.எஸ்.டி. இணை ஆணையர் குடும்பத்தினரை மிரட்டிய 3 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி

சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் ராஜேஷ்(வயது 30). கார் டிரைவரான இவர் சென்னை ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இணை கமிஷனராக பணிபுரிந்து வரும் மோகன்கோபு மற்றும் அவரது குடும்பத்தினரை அவர்களின் சொந்த ஊரான சேலத்துக்கு காரில் அழைத்து சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்களை காரில் அழைத்து கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி புறவழி சாலையில் உள்ள கோமுகி ஆற்றுப்பாலம் அருகில் வந்தபோது மாடூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன்(47) என்பவர் இருசக்கர வாகனத்தில் திடீரென சாலையின் குறுக்கே கடந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் அவர் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்து காரை நிறுத்தினார். பின்னர் சீனிவாசனிடம் தட்டிக் கேட்டபோது அவர் ஆபாசமாக திட்டி தாக்கினார். மேலும் மாணிக்கம் மகன் சந்திரன்(37), செல்லப்பிள்ளை மகன் ரமேஷ்(38) ஆகியோரை வரவழைத்து 3 பேருமாக சேர்ந்து ராஜேசை தாக்கியதோடு காரில் இருந்த ஜி.எஸ்.டி. இணை ஆணையர் மற்றும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் சீனிவாசன், சந்திரன், ராஜேஷ் ஆகிய 3 பேர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்