< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் வளரும் செடிகள்
|7 Jun 2022 12:23 AM IST
பரவத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் வளரும் செடிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பரவத்தூர் கிராமத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. அப்பகுதி கிராம மக்கள் காய்ச்சல், தலைவலி, கை கால் வலிக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த
நிலையில் கட்டிடத்தின் மேற்பகுதியில் அரசமரச்செடி வளர்ந்து உள்ளதால் செடியின் வேர் ஊன்றி கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்தது உள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படலாம். கட்டிடத்தின் மேல் பகுதியில் உள்ள அரசமரச்செடியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.