சென்னை
மாற்றுத்திறனாளிகளுக்கான குரூப்-4 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள்
|மாற்றுத்திறனாளிகளுக்கான குரூப்-4 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்னை சாந்தோமில் உள்ள சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. இதில் காது கேளாதவர்களுக்கு செய்கை மொழி பெயர்ப்பாளர்கள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும். பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான நாட்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 9499966023 மற்றும் 044-22500835 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும், பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக்குறிப்புகள் அடங்கிய கையேடும் இலவசமாக வழங்கப்படும் என்றும் சென்னை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.