< Back
மாநில செய்திகள்
அரசு பணிக்கு குரூப்-4 தேர்வு; நாளை மறுநாள் நடக்கிறது
தர்மபுரி
மாநில செய்திகள்

அரசு பணிக்கு குரூப்-4 தேர்வு; நாளை மறுநாள் நடக்கிறது

தினத்தந்தி
|
21 July 2022 11:10 PM IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படும் குரூப்-4 தேர்வை தர்மபுரி மாவட்டத்தில் 66 ஆயிரத்து 800 பேர் எழுதுகிறார்கள்.

குரூப்- 4 தேர்வு

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப்- 4 பதவிகளுக்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை தர்மபுரி மாவட்டத்தில் 242 தேர்வு மையங்களில் 66 ஆயிரத்து 800 பேர் எழுதுகிறார்கள்.

தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் அந்த வழியாக செல்லும் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விதிமுறைகள்

இந்த ேதர்வை எழுதுபவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும். கடைசி நேர அலைச்சல்களை தவிர்க்க வேண்டும். தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்க வே ண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுதுபவர்களின் அனுமதி சீட்டில் (ஹால் டிக்கெட்) பென்னாகரம் தாலுகா, ஹால் எண் 014, அரசு உயர்நிலைப்பள்ளி, சத்தியநாதபுரம் அஞ்சல், மைல்கல்: கோட்டையூர், பென்னாகரம் தாலுகா, தர்மபுரி மாவட்டம் என குறிப்பிடப்பட்டுள்ள தேர்வர்கள், ஹால் எண் 014, அரசு உயர்நிலைப்பள்ளி, சத்தியநாதபுரம் அஞ்சல், மைல்கல்: கொட்டாவூர், பென்னாகரம் தாலுகா, தர்மபுரி மாவட்டம் என்ற தேர்வு மையத்திற்கு சென்று தேர்வை எழுத வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விளக்கம் அளித்துள்ளார். கொட்டாவூர் தேர்வு மையம் பென்னாகரத்தில் இருந்து மேச்சேரி செல்லும் வழியில் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்