மதுரை
குரூப்-4 விடைத்தாள் நகல் வெளியீடு-டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் ஐகோர்ட்டில் அறிக்கை
|குரூப்-4 விடைத்தாள் நகல் வெளியிட்டு டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மதுரையை சேர்ந்த கண்மணி, கீதா ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், சமீபத்தில் வெளியிடப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவில் குளறுபடி உள்ளது. எனவே விடைத்தாள் நகல் (கீ ஆன்சர்) வெளியிட வேண்டும் என்றும், 2 பேருக்கான பணியிடங்களை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த மனு 2 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த போது, உடனடியாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 விடைகளை வெளியிட்டு அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் தரப்பில், குரூப்-4 விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர்களுக்கு ஒரு வாரத்திற்குள் குரூப்-4 ேதர்வுககான ஓ.எம்.ஆர். விடைத்தாளை வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.