< Back
மாநில செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 117 மையங்களில் குரூப்-2 தேர்வு
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 117 மையங்களில் குரூப்-2 தேர்வு

தினத்தந்தி
|
20 May 2022 9:19 PM IST

117 மையங்களில் குரூப்-2 தேர்வு

ஈரோடு மாவட்டத்தில் 117 மையங்களில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள குரூப்-2 தேர்வை 35 ஆயிரத்து 619 பேர் எழுத உள்ளனர்.

குரூப்-2 தேர்வு

அரசுத்துறையில் சார் பதிவாளர், நகராட்சி ஆணையாளர் உள்பட குரூப்- 2, 2-ஏ பிரிவுகளில் காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் முதல்நிலை தேர்வு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 117 மையங்களில் 35 ஆயிரத்து 619 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.

தேர்வு எழுத பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வில் பங்கேற்போர் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வர வேண்டும். 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கும் வகையில் தேர்வை கண்காணிக்க 8 பறக்கும் படை அலுவலர்கள், 29 நடமாடும் குழு, 120 ஒளிப்பதிவாளர்கள், 234 கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.

கிருமிநாசினி தெளிப்பு

மாவட்ட போலீஸ் மூலம், ஈரோடு மாவட்ட கருவூலத்தில் விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் உதவியுடன் வினாத்தாள், விடைத்தாள் நடமாடும் குழு வாகனங்களில் இன்று (சனிக்கிழமை) காலை எடுத்து செல்லப்பட உள்ளது.

தேர்வு கூடங்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தடையற்ற மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு நிறைவடையும். தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட் உடன் ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதாவது ஒன்றின் பிரதி மற்றும் அசல் எடுத்து வர வேண்டும். தேர்வுக்கு கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறுவதையொட்டி தேர்வு மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

---------

Related Tags :
மேலும் செய்திகள்