< Back
மாநில செய்திகள்
குரூப் 2 தேர்வு: பதிவெண் மாறியதால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் தேர்வெழுத கூடுதல் நேரம் வழங்கப்படும் - டிஎன்பிஎஸ்சி
மாநில செய்திகள்

குரூப் 2 தேர்வு: பதிவெண் மாறியதால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் தேர்வெழுத கூடுதல் நேரம் வழங்கப்படும் - டிஎன்பிஎஸ்சி

தினத்தந்தி
|
25 Feb 2023 11:54 AM IST

தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு தொடங்குவதில் சில இடங்களில் கால்தாமதம் ஏற்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் குரூப் 2 பிரதானதேர்வு இன்று நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வை சுமார் 55 ஆயிரம் பேர் எழுதிகிறார்கள். மொத்தம் 5 ஆயிரத்து 446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலைத் தேர்வு கடந்த ஆண்டு மே 21-ந்தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பிரதான தேர்வு இன்று நடக்கிறது..

காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொது அறிவு, பாடங்கள் தொடர்பான தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில், கேள்வித்தாள்கள் இருந்த பண்டலை பிரித்து வினியோகம் செய்தபோது சிறிது குழப்பம் ஏற்பட்டது. தேர்வர்கள் எண்கள் மாறி இருந்ததால் தேர்வு எழுத வந்திருந்தவர்கள் குழப்பத்திற்குள்ளானார்கள்.

இதனால் அந்த தேர்வு மையங்களில் சிறிது நேரம் காலதாமதமாக தேர்வு தொடங்கியது. இந்நிலையில் காலதாமதமாக தொடங்கிய தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வெழுத கூடுதல் நேரம் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்