< Back
மாநில செய்திகள்
தொடர் மழையால் அறுவடைக்கு முன்பே முளைத்த கடலை செடிகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தொடர் மழையால் அறுவடைக்கு முன்பே முளைத்த கடலை செடிகள்

தினத்தந்தி
|
20 Nov 2022 12:31 AM IST

தொடர் மழையால் அறுவடைக்கு முன்பே முளைத்த கடலை செடிகளால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் ஆலத்தூர் கேட்டில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர். மேலும் ஒரு சில விவசாயிகள் கடலை பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக கடலை செடிகள் அறுவடைக்கு முன்பே முளைத்து விட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இதையடுத்து, கடலையை செடியில் இருந்து பிரித்தெடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்