< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
நிலக்கடலை ரூ.2½ லட்சத்துக்கு ஏலம்
|30 Jun 2022 12:20 AM IST
நிலக்கடலை ரூ.2½ லட்சத்துக்கு ஏலம் போனது.
நொய்யல் அருகே சாலைப்புதூரில் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 36.46½ எடை கொண்ட 113 மூட்டை நிலக்கடலை ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் அதிகப்படி விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.65.50-க்கும், குறைந்த விலையாக ரூ 60.90-க்கும், சராசரி விலையாக ரூ.64.40-க்கும் என 113 மூட்டை நிலக்கடலை ரூ.2 லட்சத்து 29ஆயிரத்து 10-க்கு விற்பனை ஆனது.