< Back
மாநில செய்திகள்
நிலக்கடலை ரூ.5½ லட்சத்துக்கு ஏலம்
கரூர்
மாநில செய்திகள்

நிலக்கடலை ரூ.5½ லட்சத்துக்கு ஏலம்

தினத்தந்தி
|
20 Sept 2023 11:58 PM IST

நிலக்கடலை ரூ.5½ லட்சத்துக்கு ஏலம் போனது.

நொய்யல் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை 78.44 1/2 குவிண்டால் எடை கொண்ட 263 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.10-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.17-க்கும், சராசரி விலையாக ரூ.80.40-க்கும் என மொத்தம் ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்து 223-க்கு ஏலம் போனது.

மேலும் செய்திகள்