< Back
மாநில செய்திகள்
நிலக்கடலை பறிக்கும் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நிலக்கடலை பறிக்கும் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
30 Dec 2022 12:26 AM IST

பரமத்தி விவசாயிகள் நிலக்கடலை பறிக்கும்‌ எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என அதிகாரி தகவல் தெரிவித்தனர்.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

பரமத்தி வட்டாரத்தில் உள்ள பொதுவான விவசாயிகளுக்கு தேசிய உணவு எண்ணெய் பயிர்கள் இயக்க திட்டத்தில் நிலக்கடலை செடி பறிக்கும் எந்திரம் வாங்குவதற்கு ரூ.32 ஆயிரமும், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த எந்திரம் தேவைப்படும் பரமத்தி வட்டார விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்