தென்காசி
புதுமாப்பிள்ளை தற்கொலை
|கடையம் அருகே திருமணமான 4 மாதங்களில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடையம்:
கடையம் அருகே திருமணமான 4 மாதங்களில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுமாப்பிள்ளை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மாதாபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கவாசகம். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 25), கூலித்தொழிலாளி.
இவருக்கும் ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை சேர்ந்த காஞ்சனா என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களாக அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
விஷம் குடித்தார்
இந்த நிலையில் சம்பவத்தன்றும் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்து ராமநதி அணைக்கு செல்லும் சாலை பகுதிக்கு சென்றார். அங்கு வைத்து விஷம் குடித்து மயங்கினார்.
இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, கடையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாவு
இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.