< Back
மாநில செய்திகள்
புதுமாப்பிள்ளை தற்கொலை
விருதுநகர்
மாநில செய்திகள்

புதுமாப்பிள்ளை தற்கொலை

தினத்தந்தி
|
29 Sept 2023 1:24 AM IST

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நத்தத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னகிருஷ்ணன் (வயது 51). இவருடைய மகன் பெருமாள் (25). இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சம்பவத்தன்று இவர், வீட்டில் அதிகாலை நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் இருக்கன்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சின்ன கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் முடிந்த 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்