< Back
மாநில செய்திகள்
திருமணமான 11 நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை; போலீசார் விசாரணை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

திருமணமான 11 நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை; போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
20 Sept 2022 4:11 PM IST

காஞ்சீபுரம் அருகே திருமணமான 11 நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காஞ்சீபுரம்,

தூக்குப்போட்டு தற்கொலை

காஞ்சீபுரம் அருகே தாமல் இந்திரா நகரைச் சேர்ந்தவர் அன்பு. இவரது மகன் அசோக் (வயது 28). இவர் மத்திய மீன்வளத்துறையில் தற்காலிக ஊழியராக கப்பலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7-ந் தேதியன்று அசோக்குக்கு காயத்ரி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அசோக் தனது மனைவி காயத்ரி மற்றும் பெற்றோருடன் தாமலில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை அசோக்கின் தாயுடன் மனைவி காயத்ரி தேவாலயம் சென்றுள்ளார். தந்தை அன்புவும் வெளியில் சென்றிருந்த நிலையில், வீட்டிலிருந்த அசோக், படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் காயத்ரியின் புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அசோக், மின்விசிறியில் பிணமாக தொங்குவதைப் பார்த்து மனைவி மற்றும் தாய் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து, உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள திருப்புட்குழி அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அசோக்கை பரிசோதித்த டாகடர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் புதுமாப்பிள்ளை அசோக்கின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பலியான அசோக் அடிக்கடி வீட்டுக்கு குடித்து விட்டு வந்ததை அவரது பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணமான 11 நாளில் புதுமாப்பிள்ளை வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்