< Back
மாநில செய்திகள்
புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
வேலூர்
மாநில செய்திகள்

புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
6 July 2023 10:48 PM IST

குடும்ப தகராறில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடலூரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன் ஜெயகணேஷ் (வயது 22). தொழிலாளி. இவர் வேலூர் கொணவட்டம் தேவிநகரை சேர்ந்த சுவேதா (19) என்பவரை சமூக வலைதளம் மூலம் காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கணவன்- மனைவி இருவரும் தேவி நகரில் குடும்பம் நடத்தி வந்தனர்.

ஜெயகணேஷ்க்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஜெயகணேஷ் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெயகணேஷ் உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்