< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு 'சீல்'
|3 Oct 2022 3:35 AM IST
புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருச்சி தாளக்குடி பகுதியில் உள்ள ஆனந்த் மளிகை கடையில் கடந்த மாதம் 28-ந்தேதி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனை தொடர்ந்து நேற்று காலை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் அந்த அந்த மளிகை கடைக்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.