கள்ளக்குறிச்சி
மளிகை கடை சூறை
|திருக்கோவிலூரில் மளிகை கடை சூறை தம்பதி மீது வழக்கு
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் கடைத்தெரு தண்ணீர் டேங்க் அருகே மளிகை கடை நடத்தி வருபவர் குருநாதன்(வயது 70). இவரது மனைவி பாக்கியலட்சுமி(65). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் இளையமகள் பிரீத்தா(வயது 31) என்பவர் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பிரீத்தா அவரது கணவர் ஆகிய இருவரும் குருநாதனின் கடைக்கு வந்து அவரிடம் 50 பவுன் நகை மற்றும் நிலம் கேட்டு தகராறு செய்தனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் கடையில் இருந்த பொருட்களை வெளியே வீசி எறிந்ததோடு அங்கிருந்த ஊழியர்களையும் வெளியே விரட்டி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து குருநாதனின் மனைவி பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பிரீத்தா மற்றும் அவரது கணவர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.