< Back
மாநில செய்திகள்
மளிகை கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மளிகை கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
3 Jan 2023 12:15 AM IST

சின்னசேலம் அருகே மளிகை கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் தீவிர விசாரணை

சின்னசேலம்

கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் மகன் ரமேஷ் (வயது42). இவருக்கு ரம்யா என்ற மனைவியும், இசைவாணன்(12) என்ற மகனும், இனியவள்(6) என்ற மகளும் உள்ளனர். ரமேஷ் தற்போது சின்னசேலம் அருகே நயினார்பாளையம் கிராமத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரமேஷ் தான் குடியிருக்கும் வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாக தொியவில்லை? இது குறித்த புகாாின்பேரில் கீழ்குப்பம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து ரமேசின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்