< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் அருகே மளிகை கடைக்காரர் வெட்டிக்கொலை - 3 பேர் கைது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் அருகே மளிகை கடைக்காரர் வெட்டிக்கொலை - 3 பேர் கைது

தினத்தந்தி
|
10 Aug 2022 6:23 PM IST

காஞ்சீபுரம் அருகே மளிகை கடைக்காரர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

காஞ்சீபுரத்தை அடுத்த ராஜகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 56). இவர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ராஜகுளம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்த மண்டபத்தெருவில் வசிக்கும் சரவணன் (32) என்பவர் இவரது மளிகை கடைக்கு அருகில் துரித உணவகம் நடத்தி வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நிலம் தொடர்பான பிரச்சினை நிலவி வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சிவஞானத்தை சரவணன் மற்றும் அவரது நண்பரான சிட்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (23), ஆபேல் (24) ஆகியோர் வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் சிவஞானம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் இருந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அவரது மனைவி சாந்தி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்