< Back
மாநில செய்திகள்
90 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

90 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள்

தினத்தந்தி
|
13 July 2023 12:15 AM IST

திருக்கோவிலூரில் சிறப்பாக பணி செய்த 90 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்களை நகரமன்ற தலைவர் டி.என்.முருகன் வழங்கினார்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் நகராட்சியில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த சிறப்பு துப்புரவு பணியில் சிறப்பாக செயல்பட்ட 90 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்களை வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் ஆணையாளர் கீதா, துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்