< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது
|9 Aug 2022 1:06 AM IST
புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது குன்னம் தாலுகா, ஒகளூர் பெருமாள் கோவில் தெருவில் ஒரு மளிகை கடையை சோதனை செய்தபோது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையில் இருந்த சுமார் 5½ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளர் கோபாலகிருஷ்ணனை(வயது 36) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.