< Back
மாநில செய்திகள்
குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறை தீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறை தீர்வு கூட்டம்

தினத்தந்தி
|
24 April 2023 11:46 PM IST

ராணிப்பேட்டையில் குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறை தீர்வு கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைத்தீர்வு கூட்ட அரங்கத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்