திருவண்ணாமலை
கிராம நிர்வாக அலுவலர்களுடன் குறை தீர்வு கூட்டம்
|ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுடன் குறை தீர்வு கூட்டம் நடந்தது.
ஆரணி
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமருத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுடன் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.
வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி தலைமை தாங்கினார். தாசில்தார் ஆர்.ஜெகதீசன் முன்னிலை வகித்தார். நேர்முக உதவியாளர் க.பெருமாள் வரவேற்றார்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் ஆரணி வட்டக்கிளை தலைவர் ஆர்.கோபால், கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் உறுப்பினர்களின் கோரிக்கையை தீர்மானமாக வருவாய் கோட்டாட்சியிடம் வழங்கினார்.
கூட்டத்தில் வட்டக்கிளை செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் சிவக்குமார், துணைச் செயலாளர் புருஷோத்தமன், மகளிர் அணி செயலாளர் லோகசுந்தரி, மாவட்ட இணை செயலாளர் ஜெயச்சந்திரன் உள்பட சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.