< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
சமையல் எரிவாயு வினியோகம் தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம்
|28 March 2023 12:15 AM IST
வருகிற 31-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு வினியோகம் தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு வினியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 31-ந்தேதி மாலை 5.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.