< Back
மாநில செய்திகள்
கோவில் பணியாளர்களுக்கான குறை தீர்வு கூட்டம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கோவில் பணியாளர்களுக்கான குறை தீர்வு கூட்டம்

தினத்தந்தி
|
21 Jan 2023 4:32 PM IST

திருவண்ணாமலையில் கோவில் பணியாளர்களுக்கான குறை தீர்வு கூட்டம் நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோவில் பணியாளர்களுக்கான குறை தீர்வு கூட்டம் இன்று திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் அசோக்குமார் தலைமை தாங்கி பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதில் சுமார் 75 பணியாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.

இதில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்