< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
1 April 2023 1:36 AM IST

மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

தாமரைக்குளம்:

அரியலூர் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம், அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். கடந்த காலங்களில் மனு அளித்திருந்த 18 பேருக்கு முதியோர் ஓய்வூதிய தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் அரியலூர் தாசில்தார் கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மஞ்சுளா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், வேலை வாய்ப்பு அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் உள்ளிட்ட 13 துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்