< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு குறை தீர்வு கூட்டம்
|6 Aug 2023 4:33 PM IST
கலசபாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறை தீர்வு கூட்டம் 8-ந் தேதி நடக்கிறது.
ஆரணி
ஆரணி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஆரணி, போளூர், ஜமுனாமரத்தூர், கலசபாக்கம் ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ளடக்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30மணியளவில் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது.
ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமை தாங்குகிறார்.
இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என்று உதவி கலெக்டர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.