< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகர்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
12 Oct 2023 1:20 AM IST

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.

விருதுநகர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் மற்றும் விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட அளவில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இலவச தையல் எந்திரம், ஸ்மார்ட் போன், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தொழில் தொடங்குவதற்கான கடன் வசதி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.மேற்படி கூட்டத்தில் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை, புகைப்படம், வங்கி கணக்கு புத்தகநகல் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும் விவரம் பெறுவதற்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் டெலிபோன்எண் 04562 252088-ஐ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்