திருப்பத்தூர்
குடும்ப அட்ைட தொடர்பான குறை தீர்க்கும் முகாம்
|ஏலகிரிமலையில் குடும்ப அட்ைட தொடர்பான குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
ஏலகிரிமலையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் தேசிய நுகர்வோர் பாதுகாப்புத்துறை பொது வினியோகத் திட்டத்தின் கீழ் படி குடும்ப அட்டை தொடர்பான குறைத்தீர்வு முகாம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நடந்தது. முகாமுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் திருமலை முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் வரவேற்றார்.
முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், தொலைப்பேசி எண் பதிவு செய்தல், தொலைப்பேசி எண் மாற்றுதல், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், பிறந்த தேதி திருத்தம், உறவு முறை மாற்றுதல் போன்றவற்றுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு உரிய சான்றிதழ் முகாமில் வழங்கப்பட்டது.
முகாமில் ஏலகிரிமலையில் உள்ள 14 கிராமங்களில் இருந்து மலைவாழ் மக்கள் கலந்து கொண்டு பெயர் திருத்தம், நீக்குதல், தொலைப்பேசி எண் மாற்றுதல் உள்பட பல்வேறு திருத்தங்களுக்காக 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதில் 60 பேருக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் உடனடியாக சான்றுகளை வழங்கினார்.
மேலும் பல்வேறு குறிப்புகள் குறித்து விண்ணப்பித்துள்ள மனுதாரர்களுக்கு ஆய்வுக்கு பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முகாமில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அ.திருமால், கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.