< Back
மாநில செய்திகள்
உடையார்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் இன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

உடையார்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் இன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தினத்தந்தி
|
28 Sept 2022 1:01 AM IST

உடையார்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது.

அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் உடையார்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்