< Back
மாநில செய்திகள்
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆண்டிமடத்தில் இன்று நடக்கிறது
அரியலூர்
மாநில செய்திகள்

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆண்டிமடத்தில் இன்று நடக்கிறது

தினத்தந்தி
|
20 March 2023 6:34 PM GMT

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆண்டிமடத்தில் இன்று நடக்கிறது.

அரியலூர் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில் ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயன்பெறலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்