< Back
மாநில செய்திகள்
பெரம்பலூரில் நாளை மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூரில் நாளை மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
7 May 2023 6:30 PM GMT

பெரம்பலூரில் நாளை மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம், என்று பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்