< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
போலீசாருக்கான குறைதீர்வு கூட்டம்
|12 Oct 2023 10:30 PM IST
வேலூரில் போலீசாருக்கான குறைதீர்வு கூட்டம் நடந்தது.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாருக்கான குறை தீர்வுநாள் கூட்டம் நடைபெற்றது. வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கினார்.
அவர் போலீசாரிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். பெறப்பட்ட 70 கோரிக்கை மனுக்கள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அப்போது போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன் ஆல்பர்ட் ஜான், கிரண் ஸ்ருதி மற்றும் பலர் உடனிருந்தனர்.