திருவண்ணாமலை
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம்
|ஆரணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது.
ஆரணி
ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஆரணி, கலசபாக்கம், போளூர், ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகா உள்ளடக்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் நடந்தது.
உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமை தாங்கினார். உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகள், குறைபாடுகள் குறித்து மனுவாகவும் வாய்மொழியாகவும் தெரிவித்தனர்.
இதில் தாசில்தார்கள் ரா.மஞ்சுளா (ஆரணி) சதேஷ்பாபு (போளூர்) ராஜராஜேஸ்வரி (கலசபாக்கம்), மனோகரன் (ஜமுனாமரத்தூர்), வட்ட வழங்கல் அலுவலர்கள் வெங்கடேசன் (ஆரணி), விஸ்வநாதன் (போளூர்), ஜெகதீசன் (கலசபாக்கம்), சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் சசிகலா (ஆரணி), அமுல் (போளூர்), முனுசாமி (கலசபாக்கம்), நகராட்சி ஆணையாளர் கே.பி.குமரன், ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் உள்பட அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.