< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
முன்னாள் படைவீரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்
|20 Jun 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் முன்னாள் படைவீரர்களுக்கான குறைகேட்பு கூட்டம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் தங்களது கோரிக்கையினை தனித்தனி மனுக்களாக இரட்டை பிரதிகளில் எழுதி, அடையாள அட்டையுடன் நேரில் சமர்ப்பித்து பயன்பெறலாம். மேலும் கூடத்திற்கு வரும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் முன்னாள் படைவீரர் அசல் படைப்பணி சான்றுடன் வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.