நாமக்கல்
முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்
|முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.
முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.
குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் விதவையர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள், நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவரை சார்ந்தோர்கள் மற்றும் தற்போது பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தார்கள் கலந்து கொண்டனர்.
நடவடிக்கை எடுக்க உத்தரவு
கூட்டத்தில் 10 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதில் முன்னாள் படைவீரர்கள் உதவி இயக்குனர் செண்பகவள்ளி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.