< Back
மாநில செய்திகள்
வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம்

தினத்தந்தி
|
15 July 2023 12:05 AM IST

வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் நடந்தது.

வாணியம்பாடி

வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் நடந்தது.

வாணியம்பாடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. வாணியம்பாடி உதவி கலெக்டர் பிரேமலதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட உதவி கலெக்டர், குறை தீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி, அனைத்து கோரிக்கைகளின் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அப்போது, தனக்கு காது கேட்கும் கருவி வழங்க கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி நபருக்கு உடனடியாக கருவி வழங்கப்பட்டது.

இதேபோல் வங்கிக்கடன் பெறுவதற்கு பரிந்துரை கோரிய மாற்றுத்திறனாளி நபரின் கோரிக்கையை விசாரித்த உதவி கலெக்டர், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு பரிந்துரை கடிதம் வழங்கி நடவடிக்கை எடுத்தார்.

முகாமில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்