கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் ரத்து
|144 தடை உத்தரவால்கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி,
சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி என்பவர் பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு
நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பள்ளி சூறையாடப்பட்டது. இதையடுத்து கள்ளக்குறிச்சி தாலுகா மற்றும் சின்னசேலம் தாலுகாவுக்கு உட்பட்ட சின்னசேலம், நயினார்பாளையம் ஆகிய பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற இருந்த வாராந்திர மக்கள் குறைக்கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மனு கொடுக்க வரும் மக்களுக்காக கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை குறித்த மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.