< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடைகளில் குறை தீர்க்கும் கூட்டம்; நாளை நடக்கிறது
திருச்சி
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் குறை தீர்க்கும் கூட்டம்; நாளை நடக்கிறது

தினத்தந்தி
|
8 July 2022 2:02 AM IST

ரேஷன் கடைகளில் குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும், நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமாக, பொதுமக்களின் குறை தீர்க்கும் கூட்டங்கள் நடக்கிறது. இக்கூட்டங்களை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துகின்றனர். அதன்படி, திருச்சி கிழக்கு தாலுகாவில் சுப்பிரமணியபுரம்-4 கடையிலும், திருச்சி மேற்கு தாலுகாவில் உறையூர் அமுதம் அங்காடியிலும், திருவெறும்பூரில் பாப்பாக்குறிச்சி, ஸ்ரீரங்கத்தில் சிறுகமணி, மணப்பாறையில் அரசநிலையம், மருங்காபுரியில் வெள்ளாளப்பட்டி, லால்குடியில் ஆதிக்குடி, மண்ணச்சநல்லூரில் பிச்சாண்டார்கோவில், முசிறியில் கல்லூர், துறையூரில் புத்தனாம்பட்டி, தொட்டியத்தில் அரங்கூர் ஆகிய ரேஷன் கடைகளில் குறை தீர்க்கும் கூட்டம் ந டத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், உணவு பொருள் வழங்கல் சம்பந்தப்பட்ட தங்களின் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்