திருச்சி
குழந்தைகள் உரிமைக்கு எதிரான குறைதீர்க்கும் கூட்டம்; துறையூரில் 9-ந் தேதி நடக்கிறது
|குழந்தைகள் உரிமைக்கு எதிரான குறைதீர்க்கும் கூட்டம் துறையூரில் 9-ந் தேதி நடக்கிறது.
குறை தீர்க்கும் கூட்டம்
குழந்தைகள் தொடர்பான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்களில் குழந்தைகள் பாதிக்கப்படுதல், 19 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் கல்வி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ், காப்பீட்டு திட்ட அட்டை, குடும்ப அடையாள அட்டை, ஆதார்கார்டு, மருத்துவ உதவி, விடுதிகள் வசதி, மாற்றுத்திறனாளி நலத்திட்ட உதவிகள், இரு பெண் குழந்தைகள் திட்ட உதவிகள், புதுமைப்பெண் திட்ட உதவிகள், கட்டாய கல்வி திட்ட உதவிகள், குழந்தைகள் தொடர்பான நலத்திட்ட உதவிகள், குழந்தைகளுக்கான தொழிற்பயிற்சி, பள்ளிகள் சார்ந்த நலத்திட்ட உதவிகள், குழந்தை தத்தெடுத்தல் தொடர்பான உதவிகள், குழந்தைகள் தொடர்பான காவல்துறை சார்ந்த புகார்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசின் குழந்தைகள் தொடர்பான திட்ட உதவிகள் உள்ளிட்ட அனைத்து வகையான புகார்கள் மற்றும் குறைகளை கேட்டு தீர்வு காணுதல் தொடர்பாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் குறை தீர்க்கும் குழு அமர்வானது, துறையூர் ஒன்றியம் இமயம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் வருகிற 9-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை நடக்கிறது.
மனு அளிக்கலாம்
பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடைபெறவுள்ள குழு அமர்வில் தாங்கள் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நேரடியாக வந்து மனு அளிக்கலாம். தகவல் தொடர்புக்கு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, மெக்டொனால்டுரோடு, கலையரங்க திருமண மண்டப வளாகம் கண்டோன்மெண்ட் திருச்சி, (தொலைபேசி எண் 0431-2413055) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.