< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
தபால் வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம்
|17 March 2023 1:58 AM IST
பாளையங்கோட்டையில், 27-ந் தேதி தபால் வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் வருகிற 27-ந் தேதி காலை 11 மணிக்கு வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில் நெல்லை கோட்டத்துக்கு உட்ட்ட நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை பகுதி வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டு தபால் பணிகள் குறித்து குறைகள், தபால் சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகள் ஏதும் இருப்பின் உரிய விவரங்களுடன் நேரில் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேரில் வர இயலாதவர்கள் dotirunelveli.tn@indiapost.gov.in-ல் தங்களது குறைகள் மற்றும் ஆலோசனைகளை வருகிற 23-ந் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பலாம்.
இந்த தகவலை, நெல்லை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கோ.சிவாஜி கணேஷ் தெரிவித்துள்ளார்.