< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில், குறைதீர்க்கும் கூட்டம்    பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்    கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில், குறைதீர்க்கும் கூட்டம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்

தினத்தந்தி
|
21 Nov 2022 6:45 PM GMT

கள்ளக்குறிச்சியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.


பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 582 மனுக்கள் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.

வீட்டுமனைப்பட்டா

முன்னதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு மொத்தம் ரூ.52 ஆயிரம் மதிப்பீட்டிலான சிறப்பு சக்கர நாற்காலியை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மேலும் உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தில் வசிக்கும் கலைக்கூத்தாடி மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக ரூ.9 லட்சத்து 15 ஆயிரத்து 200 மதிப்பீட்டில் 16 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, கலெக்டாின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட வழங்கல் அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்