< Back
மாநில செய்திகள்
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
28 Oct 2022 2:29 AM IST

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 31-ந் தேதி நடக்கிறது

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது. மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா தலைமை தாங்குகிறார். இதில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். எனவே எரிவாயு நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதில் உள்ள குறைபாடுகள், தடங்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவதில் உள்ள காலதாமதம் குறித்து தங்களின் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்